பஞ்சாயத்து தலைவராக தேவி பதவியேற்க தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: பிப்16,
சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் தேவி, பிரியதர்ஷினி ஆகியோர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின்போது தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தேர்தல் முடிவை எதிர்த்து தேவி, ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், முதலில் அறிவிக்கப்பட்ட தேவியின் வெற்றியே செல்லும் என்றும், பிரியதர்சினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது என்றும் தீர்ப்பளித்தனர்.இதனை எதிர்த்து பிரியதர்சினி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேவி வெற்றி பெற்றதாக ஐகோர்ட் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், பஞ்சாயத்து தலைவியாக தேவி பதவியேற்கவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.