முதன்மை கல்வி அலுவலகம் செங்கல்பட்டில் துவக்கம்


செங்கல்பட்டு பிப்16,
செங்கல்பட்டில், முதன்மை கல்வி அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு உதயமானது. இதையடுத்து, இம்மாவட்டத்திற்கான கலெக்டர் அலுவலகம், போலீஸ் எஸ்.பி., அலுவலகம் துவங்கப்பட்டு, இயங்கி வருகின்றன.பிற துறைகளுக்கான அலுவலகம், காஞ்சிபுரத்திலேயே இயங்கி வருகின்றன.இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், செங்கல்பட்டு, அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலராக, ஆஞ்சலோ இருதயசாமி பதவியேற்று உள்ளார்.